< Back
கிரிக்கெட்
சாய் சுதர்சனுக்கு பாராட்டு தெரிவித்த வாஷிங்டன் சுந்தர்...!
கிரிக்கெட்

சாய் சுதர்சனுக்கு பாராட்டு தெரிவித்த வாஷிங்டன் சுந்தர்...!

தினத்தந்தி
|
18 Dec 2023 5:41 PM IST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் அறிமுக வீரராக களமிறங்கிய தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன் 55 ரன்கள் அடித்து அசத்தினார்.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. அதன்படி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

இதில் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயித்த 117 ரன்கள் இலக்கை இந்தியா 16.4 ஓவர்களில் அடித்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் 55 ரன்கள் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் அரைசதம் அடித்த தமிழக வீரரான சாய் சுதர்சனுக்கு, மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,' பள்ளி போட்டியில் முதல் முறையாக உங்களை நான் பார்த்தது இன்னும் எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. இப்போது இருப்பதில் அப்போது நீங்கள் பாதியளவில் மட்டுமே இருந்தீர்கள். ஹாஹா! இந்திய அணிக்காக நீங்கள் கிளாஸ் நிறைந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியதை பார்த்தது விருந்தாக இருந்தது. இந்திய அணிக்காக அறிமுகமான உங்களுக்கு வாழ்த்துக்கள் சாய்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்