வாஷிங்டன் சுந்தருக்கு காயம்: ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இடம்பெறுவதில் சிக்கல்
|பிப்ரவரியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு சுந்தர் ஒருநாள் போட்டியில் அவர் விளையாடவில்லை.
மான்செஸ்டர்,
இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே செல்ல உள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருந்தார். தற்போது அவர் காயம் அடைந்துள்ளதால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெறுவாரா என்பது கேள்வி குறியாக உள்ளது.
மான்செஸ்டரில் நடந்த ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார். வொர்செஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக லங்காஷயர் அணிக்காக களமிறங்கும் போது வாஷிங்டன் சுந்தர் இடது தோளில் பலமாக காயம் ஏற்பட்டது. அவரின் காயத்தின் அளவு தெரியவில்லை. ஆனால் அவருக்கு உடற்தகுதியில் தொடர்ந்து சிக்கல்கள் உள்ளன.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் காயம் ஒரு பெரிய பயமாக உள்ளது. பிப்ரவரி 2022 முதல் சுந்தர் இந்தியாவுக்காக விளையாடவில்லை. பிப்ரவரியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு சுந்தர் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.
ஐபிஎல் 2022-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் முதல் ஆட்டத்தில் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் கையில் ஏற்பட்ட காயத்தால் விலகினார். விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை சுந்தர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.