< Back
கிரிக்கெட்
சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து வார்னர் அளித்த தகவல்

image courtesy;PTI

கிரிக்கெட்

சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து வார்னர் அளித்த தகவல்

தினத்தந்தி
|
14 Feb 2024 3:25 PM IST

டேவிட் வார்னர் ஏற்கனவே சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

சிட்னி,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. அந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. இருப்பினும் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்தது.

இத்தொடரில் 3 போட்டிகளில் 173 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய டேவிட் வார்னர் தொடர்நாயகன் விருதை வென்றார். கடந்த 10 வருடத்திற்கு மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி 2015, 2023 உலகக்கோப்பை போன்ற ஆஸ்திரேலியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர் கடந்த மாதம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

மேலும் 2024 டி20 உலகக்கோப்பையுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்தும் அவர் விடை பெறுவதாக அறிவித்துள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சர்வதேச டி20 கெரியரில் கடைசி முறையாக தன்னுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த தொடரில் அபாரமாக விளையாடிய டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.

அதன் காரணமாக தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் விளையாடுவீர்களா? என்று 3-வது போட்டியின் முடிவில் தொகுப்பாளர் கேட்டார். அதற்கு, நான் விளையாடி முடித்து விட்டேன் இது இளம் வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுவதற்கான நேரம் என டேவிட் வார்னர் வெளிப்படையாக கூறினார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு';- "நமது வீரர்கள் நன்றாக விளையாடுகின்றனர். ஐ.பி.எல். தொடருக்கு முன்பாக நடைபெறும் நியூசிலாந்து தொடருக்கு எனக்கு நிறைய நேரம் உள்ளது. அதன் பின் டி20 உலகக்கோப்பைக்காக தயாராக உள்ளேன். நான் நன்றாக விளையாடி முடித்து விட்டேன். நம்மிடம் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். இது அவர்கள் தங்களுடைய வேலையை செய்வதற்கான நேரமாகும்" என்று கூறினார். இதன் மூலம் அவர் டி20 உலகக்கோப்பைக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெற உள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.

மேலும் செய்திகள்