கிரிக்கெட்
விராட், ரோகித் அல்ல...உலகின் சிறந்த 3 பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் - ஹர்பஜன் சிங்
கிரிக்கெட்

விராட், ரோகித் அல்ல...உலகின் சிறந்த 3 பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் - ஹர்பஜன் சிங்

தினத்தந்தி
|
14 July 2024 12:42 PM IST

உலகின் சிறந்த 3 பேட்ஸ்மேன்கள் யார்? என ஹர்பஜன் சிங் உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

பர்மிங்ஹாம்,

இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிஆட்டத்தில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன்ஸ் அணி பட்டம் வென்றது.

இந்த தொடரின் போது ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, ஆரோன் பின்ச், ராபின் உத்தப்பா ஆகிய முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் உலகின் சிறந்த 3 பேட்ஸ்மேன்கள் யார்? என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியதாவது,

என்னைப்பொறுத்தவரை உலகின் சிறந்த 3 பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரையன் லாரா, தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் ஆகியோர்தான் என்றார்.

இதே கேள்விக்கு பதில் அளித்த ராபின் உத்தப்பா, உலகின் சிறந்த 3 பேட்ஸ்மேன்கள் விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா என்று கூறினார். சுரேஷ் ரெய்னா கூறும்போது விராட் கோலி, ரோகித் சர்மா, ஜோ ரூட் என கூறினார்.

இதே கேள்விக்கு பதில் அளித்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆரோன் பின்ச் சிறந்த 3 பேட்ஸ்மேன்களாக சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங் ஆகியோரை தேர்வு செய்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



மேலும் செய்திகள்