< Back
கிரிக்கெட்
ரூ.1,000 கோடியை தாண்டிய விராட் கோலியின் சொத்து மதிப்பு...வெளியான புதிய தகவல்...!

Image Courtesy: AFP

கிரிக்கெட்

ரூ.1,000 கோடியை தாண்டிய விராட் கோலியின் சொத்து மதிப்பு...வெளியான புதிய தகவல்...!

தினத்தந்தி
|
18 Jun 2023 11:28 AM GMT

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒப்பந்த பட்டியலில் விராட் கோலி ‛ஏ பிளஸ்' பிரிவில் உள்ளதால், ரூ.7 கோடி வருமானம் கிடைக்கிறது.

பெங்களூரு,

பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் 252 மில்லியன் பேர் பின் தொடரும் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்பு குறித்து ‛ஸ்டாக் குரோ' என்ற நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கோலியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1,050 கோடி இருக்கும். சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் இவ்வளவு சொத்து வைத்திருக்கும் நபர் இவர் மட்டுமே.

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒப்பந்த பட்டியலில் ‛ஏ பிளஸ்' பிரிவில் உள்ளதால், ரூ.7 கோடி வருமானம் கிடைக்கிறது. இதனை தவிர்த்து ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒரு நாள் போட்டி ஒன்றுக்கு ரூ.5 லட்சமும், ஒரு டி - 20 போட்டிக்கு ரூ.3 லட்சமும் வருமானம் கிடைக்கிறது. ஆண்டுதோறும், இந்தியன் பிரிமியர் லீக் தொடர் மூலம் ரூ.15 கோடியும் கிடைக்கிறது

இதனை தவிர்த்து, சில நிறுவனங்களை நடத்தும் கோலி, 7 ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்துள்ளார். விளம்பரங்கள் மூலம் ஆண்டுக்கு 7.50 முதல் 10 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. பாலிவுட் மற்றும் விளையாட்டு துறையில், விளம்பரத்துறையில் அதிக வருமானம் கிடைக்கும் நபராக கோலி உள்ளார். விளம்பர தூதராக இருக்கும் நிறுவனங்கள் மூலம் 175 கோடி ரூபாய் கிடைக்கிறது.

இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.8.9 கோடியும், டுவிட்டரில் ஒரு பதிவுக்கு ரூ.2.5 கோடியும் வருமானம் பெறும் கோலிக்கு மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் ரூ.34 கோடி மதிப்புள்ள ஒரு வீடும், ஹரியானா மாநிலம் குருகிராமில் ரூ.80 கோடி மதிப்புள்ள வீடும் உள்ளது. ரூ.31 கோடி மதிப்புள்ள சொகுசு கார்களையும் வைத்துள்ளார்.

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்கும் கோவா எப்சி கால்பந்து கிளப், டென்னிஸ் அணி, மல்யுத்த அணி ஒன்றும் கோஹ்லிக்கு உள்ளது. இதன் மூலம் கோலியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1,050 கோடியாக உள்ளது. இவ்வாறு ‛ ஸ்டாக் குரோ' நிறுவனம் கூறியுள்ளது.


மேலும் செய்திகள்