< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி சவால்மிக்க வீரராக இருப்பார் - பேட் கம்மின்ஸ்
கிரிக்கெட்

"ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி சவால்மிக்க வீரராக இருப்பார்" - பேட் கம்மின்ஸ்

தினத்தந்தி
|
18 Sep 2022 10:37 PM GMT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி சவால்மிக்க வீரராக இருப்பார் என்று பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

மொகாலி,

இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நாளை மோத உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளோம். ஸ்டேடியம் முழுவதும் நிரம்பி வழியும் ரசிகர்கள் கூட்டத்தை பார்க்க ஆவல் கொண்டுள்ளேன். ரசிகர்களின் உற்சாகமே ரொம்ப ஜாலியாக இருக்கும். கோடிக்கணக்கான மக்கள் பார்ப்பது போன்று உணர்வு ஏற்படும்.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலி சதம் அடித்துள்ளார். அவர் ஒரு தரமான வீரர். எப்படியும் அவர் பார்முக்கு வந்து விடுவார் என்பது தெரியும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சவால்மிக்க வீரராக இருப்பார்."

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்