< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக டக் அவுட் ஆனார் விராட் கோலி.!

image credit: @Cricketracker

கிரிக்கெட்

உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக டக் அவுட் ஆனார் விராட் கோலி.!

தினத்தந்தி
|
29 Oct 2023 10:53 AM GMT

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 பந்துகளை சந்தித்த கோலி, ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார்.

லக்னோ,

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

தொடக்க வீரர் சுப்மன் கில் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். கவர் டிரைவ் மற்றும் ஆப் சைடு திசைகளில் கோலி பவுண்டரி அடிக்க முயன்றபோது, இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக பீல்டிங் செய்து தடுத்தனர். ரன் கணக்கை தொடங்க சிரமப்பட்ட கோலி, டேவிட் வில்லே வீசிய பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்றபோது, பந்து மிட்ஆஃப் திசையில் நின்ற ஸ்டோக்ஸ் நோக்கி சென்றது. ஸ்டோக்ஸ் எளிதாக கேட்ச் பிடித்தார்.

இதனால் விராட் கோலி 9 பந்துகள் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். இதன்மூலம் விராட் கோலி உலகக் கோப்பை தொடரில் (ஒருநாள் மற்றும் டி20) முதன்முறையாக டக் அவுட் ஆகியுள்ளார்.

மேலும் செய்திகள்