ஆர்.சி.பி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி
|ஆர்.சி.பி அணி எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
மும்பை,
நடப்பு ஐ.பி.எல். சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டிருந்த அந்த அணி அதன்பின் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்று அதிரடியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.
இருப்பினும் நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. அதன் காரணமாக விராட் கோலியும் பெங்களூரு ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நடப்பு சீசனில் பெங்களூரு அணியின் தோல்விக்கு ஆஸ்திரேலிய வீரரான கிளென் மேக்ஸ்வெல்லும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறார். இந்நிலையில், ஐ.பி.எல் தொடரின் போது ஆதரவு அளித்த ஆர்.சி.பி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், எப்போதும் போல் எங்களை நேசிக்கவும், பாராட்டவும் செய்ததற்காக ஆர்.சி.பி-யின் அனைத்து ரசிகர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.