களத்தில் மோதிக்கொண்ட விராட் கோலி - ஸ்டாய்னிஸ்..! நடந்தது என்ன ? வைரல் வீடியோ
|விராட் கோலி மற்றும் மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் .மோதிக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை,
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 21 ரன்களில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த போட்டியில் இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இந்த நிலையில் இந்த போட்டியின் பொது விராட் கோலி மற்றும் மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் .மோதிக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
குறிப்பாக 21வது ஓவரில் பந்துவீசி விட்டு சென்ற மார்கஸ் ஸ்டாய்னிஸ் ,மறுமுனையில் நின்று கொண்டிருந்த கோலி , பேட்டிங் செய்து கொண்டிருந்த கே.எல், ராகுலை நோக்கி வந்தார் . அப்போது இருவரும் எதிர்பாராத விதமாக ஒருவருக்கொருவர் மோதினர். இதை மைதானத்தில் கண்டுகொண்டிருந்த ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து .ஸ்டாய்னிஸ் சிரிப்புடனே நடந்து சென்றார். விராட் கோலி - ஸ்டாய்னிஸ் இருவரும் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணியில் இணைந்து விளையாடி இருப்பதால் , இருவரும் நட்பு ரீதியாக வேண்டுமென்றே மோதி கொண்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.