< Back
கிரிக்கெட்
ஐசிசி டி20 தரவரிசை: முதல் இடத்தை தக்கவைத்தார் சூர்யகுமார்- டாப் 10ல் இருந்து கோலி வெளியேற்றம்
கிரிக்கெட்

ஐசிசி டி20 தரவரிசை: முதல் இடத்தை தக்கவைத்தார் சூர்யகுமார்- டாப் 10ல் இருந்து கோலி வெளியேற்றம்

தினத்தந்தி
|
9 Nov 2022 6:29 PM IST

டி20ஐ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.

துபாய்,

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் நாளை நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் வலுவான இங்கிலாந்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20ஐ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் டி20ஐ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்திற்கு முன்னேறி இருந்த சூர்யகுமார் யாதவ்(869 புள்ளி) தற்போது அதை தக்கவைத்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 830 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் நியூசிலாந்தின் டெவோன் கான்வே 779 புள்ளிகளுடன் தனது மூன்றாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

கடந்த வார நிலவரத்தின்படி டி20 பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தவிர இந்திய வீரர்களில் முதல் 10 இடங்களில் விராட் கோலி மட்டும் தான் இருந்தார்(10-வது இடம்). இந்த நிலையில் தற்போது அவர் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். விராட் கோலி தற்போது 653 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் அவர் 11-வது இடத்தில் உள்ளார்.

ஐசிசி டி20ஐ பேட்டிங் தரவரிசை (நவம்பர் 9, 2022 நிலவரப்படி)

சூர்யகுமார் யாதவ் - 869 புள்ளிகள்

முகமது ரிஸ்வான் - 830 புள்ளிகள்

டெவோன் கான்வே - 779 புள்ளிகள்

பாபர் ஆசம் - 762 புள்ளிகள்

ஐடன் மார்க்ரம் - 748 புள்ளிகள்

டேவிட் மாலன் - 734 புள்ளிகள்

க்ளென் பிலிப்ஸ் - 697 புள்ளிகள்

ரெய்லி ரூஸோ- 693 புள்ளிகள்

ஆரோன் பின்ச் - 680 புள்ளிகள்

பதும் நிசாங்கா- 673 புள்ளிகள்

மேலும் செய்திகள்