< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
'விராட் கோலி 100 சதங்கள் அடிக்க வேண்டும்' - சோயப் அக்தர் விருப்பம்
|21 Jan 2024 4:20 AM IST
விராட் கோலி இந்த காலகட்டத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
துபாய்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயப் அக்தர், துபாயில் நடைபெற்று வரும் ஐ.எல். டி-20 கிரிக்கெட் தொடரின் வர்ணனையாளராகவும், அந்த போட்டியின் விளம்பர தூதராகவும் பங்காற்றி வருகிறார். இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு சோயப் அக்தர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
"விராட் கோலி எங்கள் காலத்தில் விளையாடியிருந்தால் மிகச்சிறந்த போட்டியாக இருந்திருப்பார். சில சிரமங்களை அவர் எதிர்கொண்டிருக்கலாம், ஆனால் அவர் இப்போது அடித்த ரன்களை நிச்சயம் எடுத்திருப்பார். அதே சமயம் வாசிம் அக்ரமின் பந்துவீச்சை எதிர்கொள்வது எளிதல்ல.
இருப்பினும் விராட் கோலி இந்த காலகட்டத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன். இரண்டு காலங்களையும் ஒப்பிட முடியாது. அவர் நூறு சதங்கள் அடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்."
இவ்வாறு சோயப் அக்தர் தெரிவித்தார்.