< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
சதத்தில் அரைசதம் கண்ட விராட் கோலி..!
|15 Nov 2023 5:33 PM IST
ஒருநாள் போட்டிகளில் சச்சின் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
மும்பை,
உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் 106 பந்துகளில் ஒரு சிக்ஸ், 8 பவுண்டரிகளுடன் விராட் கோலி சதமடித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்தார்.
ஒருநாள் போட்டிகளில் சச்சின் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்த நிலையில் விராட் கோலி 50-வது சதமடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். 279 ஒருநாள் இன்னிங்சில் விளையாடியுள்ள விராட் கோலி தனது 50-வது சதத்தை நிறைவு செய்தார். ஆட்டத்தைக்கண்டு களித்து வரும் சச்சின் தெண்டுல்கர் முன்னிலையில் அவரது சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த சச்சின் சாதனையை விராட் கோலி சற்று முன் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.