ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் மீண்டும் டாப் 10 இடத்திற்குள் நுழைந்த விராட் கோலி...!
|டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
துபாய்,
டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முன்னாள் நம்பர் 1 வீரரான இந்தியாவை சேர்ந்த விராட் கோலி மீண்டும் டாப் 10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். அவர் 761 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர்களில் டாப் 10 இடத்திற்குள் உள்ள ஒரே ஒரு பேட்ஸ்மேன் கோலி மட்டுமே ஆவார். இந்த வரிசையில் முதலிடத்தில் நியூசிலாந்து வீரரான வில்லியம்சனும், 2-வது இடத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ஜோ ரூட்டும் உள்ளனர்.
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரரான அஸ்வின் முதலிடத்தில் தொடருகிறார். இந்த தரவரிசையில் பும்ரா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 4-வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்களான ஜடேஜா மற்றும் அஸ்வின் மாற்றமின்றி முதல் 2 இடங்களில் தொடருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்சன் 5 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.