< Back
கிரிக்கெட்
நூர் அகமது-க்கு தனது கையெழுத்திட்ட ஜெர்ஸியை வழங்கி பாராட்டிய விராட் கோலி

image courtesy: X (Twitter) / @gujarat_titans

கிரிக்கெட்

நூர் அகமது-க்கு தனது கையெழுத்திட்ட ஜெர்ஸியை வழங்கி பாராட்டிய விராட் கோலி

தினத்தந்தி
|
5 May 2024 12:37 PM IST

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

பெங்களூரு,

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஷாரூக் கான் 37 ரன்கள் எடுத்தார். பெங்களூரு தரப்பில் சிராஜ், யாஷ் தயாஸ்ல், வைசாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 152 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 64 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் ஜோசுவா லிட்டில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் முகமது சிராஜ்-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பின்னர் குஜராத் வீரர் நூர் அகமதுவுக்கு விராட் கோலி தனது கையெழுத்திட்ட ஆர்.சி.பி ஜெர்ஸியை வழங்கி பாராட்டி உள்ளார்.

அந்த ஜெர்சியில், அன்புள்ள நூர், நன்றாக பவுலிங் செய்தீர்கள் - உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் என எழுதி கோலி கையெழுத்திட்டுள்ளார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கோலி 42 ரன் எடுத்த நிலையில் நூர் அகமதுவின் பந்துவீச்சில் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்