< Back
கிரிக்கெட்
ராகுல் டிராவிட்டை முந்திய விராட் கோலி....!
கிரிக்கெட்

ராகுல் டிராவிட்டை முந்திய விராட் கோலி....!

தினத்தந்தி
|
27 Dec 2023 3:49 PM IST

மேலும் 33 ரன்கள் அடித்தால் சேவாக்கை பின்னுக்கு தள்ளி கோலி 2-வது இடத்திற்கு முன்னேறுவார்.

செஞ்சூரியன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒரு நாள் தொடர் முடிவடைந்த நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று ஆரம்பமானது.

அதன்படி இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்திருந்தது. இதில் விராட்கோலி 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் விராட் கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட்டை முந்தி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்த பட்டியலில் ராகுல் டிராவிட் 1,252 ரன்கள் அடித்து 3-வது வீரராக இருந்தார். தற்போது விராட்கோலி 1,274 ரன்களுடன் அவரை முந்தி 3-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் 33 ரன்கள் அடித்தால் சேவாக்கை பின்னுக்கு தள்ளி கோலி 2-வது இடத்திற்கு முன்னேறுவார். இந்த பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் 1,741 ரன்களுடன் முதல் இடத்திலும், ஷேவாக் 1,306 ரன்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் செய்திகள்