< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
மும்பையில் உணவகம் தொடங்குகிறார் விராட் கோலி!
|2 Sept 2022 2:54 PM IST
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி மும்பையில் உணவகத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட்டின் முக்கிய நட்சத்திரமாக வலம் வருபவர் விராட் கோலி. தற்போது இவர் ஆசிய கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், இவர் மும்பையில் உணவகம் ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள மறைந்த பாலிவுட் பாடகர் கிஷோர் குமாரின் பங்களாவில் விராட் கோலி உயர்தர உணவகத்தை திறக்கிறார். இதனை கிஷோர் குமாரின் மகன் அமித் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த உணவகம் எந்த நேரத்திலும் திறக்க தயாராக உள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.