பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு விராட் கோலி வழங்கிய பரிசு
|இந்திய வீரர் விராட் கோலி தனது ஆட்டோகிராப் போட்ட ஜெர்சியை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு வழங்கினார்.
அகமதாபாத்,
10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டத்தால் 30.3 ஓவரில் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டம் முடிந்த பிறகு மைதானத்தில் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் சந்தித்து கொண்டனர். அப்போது விராட் கோலி தனது ஆட்டோகிராப் போட்ட ஜெர்சியை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு வழங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்கள் சிலருக்கு விராட் கோலி, தான் பயன்படுத்திய பேட், கையுறை, ஜெர்சி என பல்வேறு பரிசுகளை வழங்கியிருந்த வேளையில் தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கும் பரிசு வழங்கி அவரை கௌரவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.