< Back
கிரிக்கெட்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஜய் சங்கர், ஸ்ரீசாந்த் சாமி தரிசனம்
கிரிக்கெட்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஜய் சங்கர், ஸ்ரீசாந்த் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
2 Aug 2023 10:35 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் திருப்பதிக்கு தங்கள் குடும்பத்தினரோடு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் தனது குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சங்கர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவது என்பது ஏலத்தின் மூலம் தான் முடிவாகும் என்றும், எந்த அணியில் விளையாடினாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

இதே போல் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இன்று திருப்பதியில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீசாந்த், தமிழ் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும், வர்ணனையாளராக பயிற்சி பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்