< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
விஜய் ஹசாரே டிராபி; சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்..? - இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் - அரியானா அணிகள் இன்று மோதல்..!
|16 Dec 2023 7:09 AM IST
அரையிறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு - அரியானா, ராஜஸ்தான் - கர்நாடகா அணிகள் மோதின
ராஜ்கோட்,
விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்களின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.
அரையிறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு - அரியானா, ராஜஸ்தான் - கர்நாடகா அணிகள் மோதின. இதில் அரியானா அணி தமிழ்நாட்டையும், ராஜஸ்தான் அணி கர்நாடகாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இதையடுத்து சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் ராஜஸ்தான் - அரியானா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.