< Back
கிரிக்கெட்
விஜய் ஹசாரே டிராபி; அரையிறுதிக்கு முன்னேறுமா தமிழ்நாடு - மும்பையுடன் நாளை மோதல்...!

Image Courtesy : Twitter

கிரிக்கெட்

விஜய் ஹசாரே டிராபி; அரையிறுதிக்கு முன்னேறுமா தமிழ்நாடு - மும்பையுடன் நாளை மோதல்...!

தினத்தந்தி
|
10 Dec 2023 1:31 PM IST

விஜய் ஹசாரே டிராபி தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெற உள்ளன.

ராஜ்கோட்,

விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் மற்றும் முதன்மை காலிறுதி ஆட்டங்களின் முடிவில் அரியானா, பெங்கால், ராஜஸ்தான், கேரளா, விதர்பா, கர்நாடகா, மும்பை, தமிழ்நாடு ஆகிய 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.

இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெற உள்ளன. இதில் 4வது காலிறுதி ஆட்டத்தில் தமிழக அணி மும்பையை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ராஜ்கோட்டில் உள்ள சனோசரா கிரிக்கெட் மைதானம் பி-ல் காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது.

மற்ற காலிறுதி ஆட்டங்களில் அரியானா - பெங்கால், ராஜஸ்தான் - கேரளா, விதர்பா - கர்நாடகா அணிகள் மோத உள்ளன. காலிறுதி ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

மேலும் செய்திகள்