< Back
கிரிக்கெட்
விஜய் ஹசாரே டிராபி; தமிழக அணி 5வது வெற்றி..!

Image Courtesy: Twitter 

கிரிக்கெட்

விஜய் ஹசாரே டிராபி; தமிழக அணி 5வது வெற்றி..!

தினத்தந்தி
|
5 Dec 2023 1:17 PM IST

விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

மும்பை,

விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற குரூப் இ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழக அணி நாகலாந்தை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய நாகலாந்து அணி தமிழக அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 69 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழக அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையடுத்து 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தமிழக அணி 7.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் 6 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணி 5வது வெற்றியை பதிவு செய்தது.

மேலும் செய்திகள்