< Back
கிரிக்கெட்
விஜய் ஹசாரே டிராபி இறுதிப்போட்டி; ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற அரியானா பேட்டிங் தேர்வு..!

Image Courtesy: @BCCIdomestic

கிரிக்கெட்

விஜய் ஹசாரே டிராபி இறுதிப்போட்டி; ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற அரியானா பேட்டிங் தேர்வு..!

தினத்தந்தி
|
16 Dec 2023 1:35 PM IST

அரையிறுதி ஆட்டங்களில் அரியானா அணி தமிழ்நாட்டையும், ராஜஸ்தான் அணி கர்நாடகாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

ராஜ்கோட்,

விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்களின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.

அரையிறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு - அரியானா, ராஜஸ்தான் - கர்நாடகா அணிகள் மோதின. இதில் அரியானா அணி தமிழ்நாட்டையும், ராஜஸ்தான் அணி கர்நாடகாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இதையடுத்து சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் ராஜஸ்தான் - அரியானா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற அரியானா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்