< Back
கிரிக்கெட்
விஜய் ஹசாரே டிராபி: தினேஷ் கார்த்திக் அதிரடி வீண்...முதல் தோல்வியை சந்தித்த தமிழ்நாடு...!

Image Courtesy: Twitter

கிரிக்கெட்

விஜய் ஹசாரே டிராபி: தினேஷ் கார்த்திக் அதிரடி வீண்...முதல் தோல்வியை சந்தித்த தமிழ்நாடு...!

தினத்தந்தி
|
1 Dec 2023 6:46 PM IST

விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

மும்பை,

விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற குரூப் இ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழக அணி பஞ்சாபை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் மும்பையில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 251 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் தரப்பில் மந்தீப் சிங் 68 ரன்னும், ப்ரம்சிம்ரன் சிங் 58 ரன்னும் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் அபராஜித் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 252 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தமிழக அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 175 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பஞ்சாப் அணி 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் தமிழக அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

தமிழக அணி தரப்பில் தினேஷ் கார்த்திக் 93 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் சித்தார்த் கெளல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த தொடரில் இதுவரை 4 லீக் ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணி 3 வெற்றி, 1 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

மேலும் செய்திகள்