< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
விஜய் ஹசாரே டிராபி; தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமனம்...!
|10 Nov 2023 10:53 AM IST
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமானதாக கருதப்படும் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது.
சென்னை,
இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமானதாக கருதப்படும் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. 38 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடர் டிசம்பர் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் 5 முறை சாம்பியனான தமிழக அணி 'இ' பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இதே பிரிவில் கோவா, பெங்கால், பரோடா, பஞ்சாப், மத்திய பிரதேசம், நாகலாந்து ஆகிய அணிகளும் உள்ளன. லீக் சுற்றில் தமிழக அணி விளையாடும் ஆட்டங்கள் மும்பையில் நடைபெறுகின்றன.
தனது முதல் ஆட்டத்தில் தமிழக அணி வரும் 25-ம் தேதி கோவாவை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.