< Back
கிரிக்கெட்
விஜய் ஹசாரே டிராபி: தமிழக அணிக்கு 294 ரன்களை இலக்காக நிர்ணயித்த அரியானா !
கிரிக்கெட்

விஜய் ஹசாரே டிராபி: தமிழக அணிக்கு 294 ரன்களை இலக்காக நிர்ணயித்த அரியானா !

தினத்தந்தி
|
13 Dec 2023 5:46 PM IST

தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக நடராஜன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ராஜ்கோட்,

விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்களின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு - அரியானா அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அரியானா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த அரியான அணி ஹிமான்ஷு ராணாவின் சதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 293 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் தமிழக அணிக்கு 294 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது அரியானா.

அரியானா அணி தரப்பில் அதிகபட்சமாக ஹிமான்ஷு ராணா 116 ரன்களும், யுவராஜ் சிங் 65 ரன்களும் அடித்தனர். தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக நடராஜன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மேலும் செய்திகள்