< Back
கிரிக்கெட்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி தோல்வி...!
கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி தோல்வி...!

தினத்தந்தி
|
29 Nov 2022 3:54 AM IST

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி தோல்வி அடைந்தது.

ஆமதாபாத்,

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

தமிழ்நாடு- சவுராஷ்டிரா அணிகள் இடையிலான மற்றொரு கால்இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் நாடியாத்தில் நேற்று நடந்தது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா 8 விக்கெட்டுக்கு 293 ரன்கள் சேர்த்தது. அடுத்து களம் இறங்கிய தமிழக அணி 48 ஓவர்களில் 249 ரன்னில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் சவுராஷ்டிரா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதியை எட்டியது.

நடப்பு தொடரில் தொடர்ந்து 5 சதங்கள் அடித்து சாதனை படைத்தவரான தமிழக அணியின் விக்கெட் கீப்பர் என்.ஜெகதீசன் இந்த ஆட்டத்தில் 8 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆகி ஏமாற்றம் அளித்தார். அதிகபட்சமாக சாய் கிஷோர் 74 ரன்களும் (92 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் பாபா இந்திரஜித் 53 ரன்களும் எடுத்தனர்.

மற்ற ஆட்டங்களில் கர்நாடகா 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பையும், அசாம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜம்மு-காஷ்மீரையும் தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

மேலும் செய்திகள்