< Back
கிரிக்கெட்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா - மகாராஷ்டிரா அணிகள் இன்று மோதல்

Image Courtesy: BCCI Domestic Twitter 

கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா - மகாராஷ்டிரா அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
2 Dec 2022 7:07 AM IST

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

அகமதாபாத்,

38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கடந்த 30ந் தேதி நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் கர்நாடகா - சவுராஷ்டிரா அணிகளும், மகாராஷ்டிரா - அசாம் அணிகளும் மோதின.

இந்த ஆட்டங்களில் சவுராஷ்டிரா மற்றும் மகாராஷ்டிரா அணிகள் வெற்றி பெற்றன. இந்நிலையில் இன்று நடைபெறும் விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா - மகாராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. காலை 9 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

இந்த ஆட்டத்தை பொறுத்தவரை மகாராஷ்டிராவின் ருதுராஜ் கெய்க்வாட்டை சீக்கிரம் வீழ்த்தினால் அந்த அணியை குறைந்த ஸ்கோரில் கட்டுப்படுத்த வாய்ப்பு உள்ளது. தமிழக அணி இந்த தொடரில் காலிறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணியிடம் தோல்வியை தழுவி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்