< Back
கிரிக்கெட்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறுமா தமிழக அணி -  சவுராஷ்டிராவுடன் மோதல்
கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறுமா தமிழக அணி - சவுராஷ்டிராவுடன் மோதல்

தினத்தந்தி
|
28 Nov 2022 8:50 AM IST

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் கால் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி சவுராஷ்டிரா அணியை எதிர் கொள்கிறது.

அகமதாபாத்,

இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்தத்தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது. கால் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி சவுராஷ்டிரா அணியை எதிர் கொள்கிறது. தமிழக அணி லீக் சுற்று ஆட்டங்களில் 7 போட்டிகளில் ஆடி 5ல் வெற்றி பெற்றது. 2 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது . தமிழக அணி அருணாச்சல பிரதேச அணியுடன் மோதுகையில் உலக சாதனை படைத்தது.

அந்த ஆட்டத்தில் தமிழக அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 506 ரன்களை குவித்து, வரலாறு படைத்தது. லிஸ்ட் ஏ போட்டிகளில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்த தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தமிழக அணி இன்றும் சிறப்பாக ஆடும் பட்சத்தில் அரையிறுதிக்கு முன்னேறும்.

மற்ற காலிறுதி ஆட்டங்களில் பஞ்சாப் - கர்நாடகா, மகாராஷ்டிரா - உத்திர பிரதேசம், அசாம் - ஜம்மு&காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்