நெதர்லாந்து அணிக்கு எதிரான வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
|உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது.
புதுடெல்லி,
உலகக்கோப்பை தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில், இந்தியா - நெதர்லாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது. அத்துடன், லீக் போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;
"தீபாவளி இன்னும் சிறப்பு வாய்ந்ததாக மாற்றிய எங்கள் கிரிக்கெட் அணிக்கு நன்றி. திறமை மற்றும் குழுப் பணி காரணமாக அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாஅழ்த்துக்கள். அரையிறுதிக்கு வாழ்த்துக்கள். இந்தியா மகிழ்ச்சியடைந்துள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.