< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
குஜராத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் கிடுகிடுவென முன்னேறிய பெங்களூரு
|5 May 2024 2:28 PM IST
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற குஜராத்துக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வெற்றி பெற்றது.
பெங்களூரு,
ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 52-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் பெங்களூரு அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும்.
இதன் மூலம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த பெங்களூரு கிடுகிடுவென முன்னேறி 7-வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளது. அந்த அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள் 4 தோல்விகளுடன் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் லேசாக ஒட்டிக் கொண்டுள்ளது. மற்ற அணிகளின் முடிவைப்பொறுத்தே பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான், கொல்கத்தா, லக்னோ, ஐதராபாத் அணிகள் முறையே முதல் 4 இடங்களில் உள்ளன.