மும்பைக்கு எதிரான வெற்றி...புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்
|மும்பைக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக பாண்ட்யா 34 ரன்கள் எடுத்தார்.
ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட், சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 54 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. அந்த அணி 3 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் (+1.047 ரன்ரேட்) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று ஆட்டங்களில் ஆடி இரண்டு போட்டியில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் (+ 0.976 ரன்ரேட்) மூன்றாவது இடத்திலும், குஜராத் அணி மூன்று ஆட்டங்களில் ஆடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் (-0.738 ரன்ரேட்) 4-வது இடத்திலும் உள்ளன.
ஐதராபாத் அணி 3 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் (+ 0.204 ரன்ரேட்) 5வது இடத்திலும், லக்னோ அணி 2 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் (+ 0.025) 6வது இடத்திலும், டெல்லி அணி 3 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் (-0.016 ரன்ரேட்) 7வது இடத்திலும், பஞ்சாப் அணி 3 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் (-0.337ரன்ரேட் ) 8வது இடத்திலும், பெங்களூரு அணி 3 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் (- 0.711 ரன்ரேட்) 9வது இடத்திலும் உள்ளன.
இதுவரை தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 0 புள்ளிகளுடன் (-1.423 ரன்ரேட்) புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.