< Back
கிரிக்கெட்
நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
கிரிக்கெட்

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

தினத்தந்தி
|
27 May 2022 5:32 AM IST

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து வீராங்கனை எமி சட்டர்த்வெய்ட் அறிவித்துள்ளார்.

வெல்லிங்டன்,

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் எமி சட்டர்த்வெய்ட், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர புதிய ஒப்பந்தத்தில் அவருக்கு இடம் மறுக்கப்பட்ட விரக்தியில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

35 வயதான எமி சட்டர்த்வெய்ட், நியூசிலாந்து அணிக்காக அதிக ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். 145 ஆட்டங்களில் 7 சதம் உள்பட 4,639 ரன்கள் எடுத்துள்ளார். 111 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார்.

மேலும் செய்திகள்