< Back
கிரிக்கெட்
ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது - நிகோலஸ் பூரன்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது - நிகோலஸ் பூரன்

தினத்தந்தி
|
18 Oct 2022 1:39 AM GMT

சுழற்பந்து வீச்சுக்கு எதிராக எங்களது பேட்டிங் ஏமாற்றம் அளித்தது என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

ஹோபர்ட்,

16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13ந் தேதி வரை நடைபெறுகிது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

இதில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முன்சே 66 ரன்களும், கிறிஸ் 16 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது.

அந்த அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 118 ரன்களே எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் மார்க் வாட் 3 விக்கெட்டும், பிரெட் வீல், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜோஷ் டாவே, சப்யான் ஷரிப் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக் ஹோல்டர் 38 ரன்கள் எடுத்தார்.

இரண்டு முறை டி20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்து அணியிடம் வீழந்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஸ்காட்லாந்து அணியிடம் அடைந்த தோல்விக்கு பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் கூறுகையில்,

'இது எங்களுக்கு கடினமான தோல்வியாகும். இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் கடுமையாக உழைத்து அடுத்து வரும் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெறுவோம். அதற்குரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக எங்களது பேட்டிங் ஏமாற்றம் அளித்தது.

சுழற்பந்து வீச்சை எதிர்கொள்கையில் நாங்கள் இன்னும் பொறுப்புடன் ஆட வேண்டும். நாங்கள் இந்த தோல்வியை விரைவில் மறந்து அடுத்து வரும் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியமானதாகும்' என்றார்.

ஸ்ட்காட்லாந்து அணியின் கேப்டன் ரிச்சி பெரிங்டன் அளித்த பேட்டியில்,

'இது எங்களுக்கு சிறப்பான வெற்றியாகும். எங்களது அதிக உழைப்பு நம்பிக்கையை அளித்து இருக்கிறது. நாங்கள் விரும்பியபடி அதிக 20 ஓவர் போட்டியில் ஆடவில்லை. ஆனால் 50 ஓவர் போட்டியில் அதிகம் விளையாடி இருக்கிறோம். அந்த திறமையை குறுகிய வடிவ போட்டிக்கு தகுந்தபடி மாற்றுவது முக்கியமானதாகும்.

நாங்கள் இந்த போட்டி தொடரில் சிறப்பான தொடக்கம் கண்டு இருப்பதாக நினைக்கிறேன். ஜார்ஜ் முன்சி விரைவாக ரன்கள் சேர்த்தார். எங்களது பந்து வீச்சாளர்கள் அருமையாக செயல்பட்டனர். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தினர்' என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்