ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை: தகுதிச் சுற்றில் விளையாட அமெரிக்க அணி தகுதி..!!
|ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் விளையாட அமெரிக்க அணி தகுதி பெற்றுள்ளது.
துபாய்,
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்காக சென்னை உட்பட 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த சூழலில் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கான லோகோவை கடந்த 2-ஆம் தேதி ஐசிசி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் விளையாட அமெரிக்க அணி தகுதி பெற்றுள்ளது.
அமெரிக்க அணி இதற்கு முன்பு ஒருமுறை மட்டுமே உலகக்கோப்பை தொடருக்காக தகுதிச் சுற்றில் இடம்பெற்றிருந்தது. இதன்படி 2004 நடந்த சாம்பியன்ஸ் டிராபி முதல் சுற்றில் வெளியேறியது.
செவ்வாய்க்கிழமை இந்தியாவில் நடைபெற்ற இந்த ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இறுதி சுற்று தகுதிப் போட்டியில், ஜெர்சியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அமெரிக்கா. பிரதான போட்டிக்கு ஒருபோதும் தகுதி பெறாத அமெரிக்க அணி, நமீபியாவில் நடந்த குவாலிபையர் பிளே-ஆப் போட்டியில் ஐந்து ஆட்டங்களில் நான்கு வெற்றியுடன் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர்.
இதனிடையே 10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக்கான இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை ஜிம்பாப்வேயில் நடைபெறுகிறது.
ஸ்காட்லாந்து, ஓமன் மற்றும் நேபாளத்துடன் நெதர்லாந்து, ஜிம்பாப்வே, இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகள் உலகக் கோப்பை போட்டிக்கான கடைசி இரண்டு இடங்களுக்காக போட்டியிடுகிறது.