அதிவேகமாக பந்து வீசிய உம்ரான்...பல அடி தூரம் பறந்து விழுந்த பெய்ல்ஸ் - வீடியோ...!
|இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
புனே,
இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சை அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் சேர்த்தது.
இந்த இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.
இந்த போட்டியில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதில் 2 விக்கெட் போல்ட் முறையில் எடுக்கப்பட்டது. அதில் ஒரு போல்ட் விக்கெட்டின் போது பெய்ல்ஸ் கீப்பரை தாண்டி விழுந்தது. இந்த விக்கெட்டின் வீடியோவை ரசிகர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.