மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான நடுவர்கள் விவரம் அறிவிப்பு
|மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான நடுவர்கள் விவரங்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
துபாய்,
10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதில் குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இந்த தொடரை முன்னிட்டு 10 நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இந்நிலையில், இந்த தொடருக்கான நடுவர்கள் விவரங்களை சர்வதேச கிரிகெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. 10 கள நடுவர்கள் மற்றும் 3 போட்டிகள் என மொத்தம் 13 பேரை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
நடுவர்கள் விவரம்;
கள நடுவர்கள்; லாரன் ஏஜென்பேக் (தென் ஆப்பிரிக்கா), கிம் காட்டன் (நியூசிலாந்து), சாரா தம்பனேவானா (ஜிம்பாப்வே), அன்னா ஹாரிஸ் (இங்கிலாந்து), நிமாலி பெரேரா (இலங்கை), கிளாரி பொலோசாக் (ஆஸ்திரேலியா), விருந்தா ரதி (இந்தியா), சூ ரெட்பெர்ன் (இங்கிலாந்து), எலோயிஸ் ஷெரிடன் (ஆஸ்திரேலியா), ஜாக்குலின் வில்லியம்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்).
போட்டி நடுவர்கள்: ஷான்ட்ரே பிரிட்ஸ் (தென் ஆப்பிரிக்கா), ஜி.எஸ்.லட்சுமி (இந்தியா), மிச்செல் பெரேரா (இலங்கை).