< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான நடுவர்கள் அறிவிப்பு

image courtesy: ICC

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை தொடருக்கான நடுவர்கள் அறிவிப்பு

தினத்தந்தி
|
3 May 2024 8:07 PM IST

டி20 உலகக்கோப்பை தொடருக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

துபாய்,

9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 28 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 55 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இதில் நடைபெற உள்ள முதல் சுற்று போட்டிகளுக்கான நடுவர்களின் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அதன்படி 20 நடுவர்கள் மற்றும் 6 மேட்ச் ரெப்ரிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

நடுவர்கள்: கிறிஸ் பிரவுன், குமார் தர்மசேனா, கிறிஸ் கபனே, மைக்கேல் கோப், அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், அல்லாஹுடியன் பலேக்கர், ரிச்சர்ட் கெட்டில்பரோ, ஜெயராமன் மதனகோபால், நிதின் மேனன், சாம் நோகஜ்ஸ்கி, அஹ்சன் ராசா, ரஷித் ரியாஸ், பால் ரீபெல், லாங்டன் ரூசெர், ஷாகித் சைகாட், ரோட்னி டக்கர், அலெக்ஸ் வார்ப், ஜோயல் வில்சன் மற்றும் ஆசிப் யாகூப்.

மேட்ச் ரெப்ரிகள்: டேவிட் பூன், ஜெப் குரோவ், ரஞ்சன் மதுகல்லே, ஆண்ட்ரூ பைக்ராப்ட், ரிச்சி ரிச்சர்ட்சன் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத்.

மேலும் செய்திகள்