< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகும் துஷார் தேஷ்பாண்டே
|13 July 2024 4:47 PM IST
ஜிம்பாப்வே - இந்தியா இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
ஹராரே,
சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் துஷார் தேஷ்பாண்டே அறிமுக வீரராக இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக முதல் முறையாக இன்று களமிறங்க உள்ளார்.