< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டோனியின் காயத்துக்கு மும்பையில் சிகிச்சை - ஆபரேஷன் குறித்து ஆலோசனை
|1 Jun 2023 2:24 AM IST
பிரபல எலும்பியல் மருத்துவ நிபுணருடன் டோனி காயத்தன்மை குறித்து பரிசோதித்து ஆலோசனை கேட்க உள்ளார்.
புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டோனி இடதுகால் முட்டியில் ஏற்பட்ட காயத்துடன் இந்த சீசன் முழுவதும் விளையாடினார். சில நேரங்களில் வேகமாக ஓடுவதற்கு சிரமப்பட்டார். காயப்பிரச்சினைக்கு மத்தியிலும் கோப்பையை வென்று சாதித்து காட்டினார்.
இந்த நிலையில் மும்பைக்கு செல்லும் 41 வயதான டோனி அங்கு பிரபல எலும்பியல் மருத்துவ நிபுணருடன் காயத்தன்மை குறித்து பரிசோதித்து ஆலோசனை கேட்க உள்ளார். காயத்தில் இருந்து முழுமையாக மீள்வதற்கு உடனடியாக ஆபரேஷன் செய்வதே சரியான தீர்வாக இருக்கும் என்று டாக்டர் குழு பரிந்துரைக்கும் பட்சத்தில், இறுதி முடிவை டோனியே எடுப்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் நேற்று தெரிவித்தார்.