< Back
கிரிக்கெட்
6 ஆண்டுகளுக்கு பின் ஐ.பி.எல். தொடரில் களமிறங்கும் டிராவிஸ் ஹெட்: ஐதராபாத் அணிக்காக தீவிர பயிற்சி
கிரிக்கெட்

6 ஆண்டுகளுக்கு பின் ஐ.பி.எல். தொடரில் களமிறங்கும் டிராவிஸ் ஹெட்: ஐதராபாத் அணிக்காக தீவிர பயிற்சி

தினத்தந்தி
|
17 March 2024 4:48 PM IST

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் நடப்பு ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஐதராபாத்,

17வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் மோதும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி நடைபெறுகிறது.

ஐ.பி.எல். தொடர் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு அணியின் வீரர்களும் அணியுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டிராவிஸ் ஹெட் 6 ஆண்டுகளுக்கு பின் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கிறார். கடைசியாக 2017ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக டிராவிஸ் ஹெட் களமிறங்கியுள்ளார். அதன்பின்னர், எந்த ஐ.பி.எல். தொடரிலும் ஹெட் பங்கேற்கவில்லை.

ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க டிராவிஸ் ஹெட் தற்போது இந்தியா வந்துள்ளார். அவர், சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியில் இணைந்து சக வீரர்களுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஐ.பி.எல் தொடரில் வரும் சனிக்கிழமை நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்