< Back
கிரிக்கெட்
அகமதாபாத்தில் கனமழை: குஜராத் - கொல்கத்தா இடையேயான ஆட்டம் பாதிப்பு
கிரிக்கெட்

அகமதாபாத்தில் கனமழை: குஜராத் - கொல்கத்தா இடையேயான ஆட்டம் பாதிப்பு

தினத்தந்தி
|
13 May 2024 9:03 PM IST

குஜராத் - கொல்கத்தா இடையேயான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்,

நடப்பு ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அமகதாபாத்தில் இன்று நடைபெற உள்ள 63வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோத உள்ளன.

ஆட்டம் இரவு 7.30 மணியளவில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், மாலை முதல் அகமதாபாத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 7.30 மணிக்கு தொடக்கவேண்டிய ஆட்டம் 9 மணியை நெருங்கும் நிலையில் இன்னும் தொடங்கவில்லை. மழை தொடர்ந்து பெய்துவருவதால் இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை இரவு 11 மணிக்குள் மழை நின்றால் குறைந்தது 5 ஓவர்கள் ஆட்டமாக நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மழை தொடர்ந்து நீடித்தால் ஆட்டம் ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்படும்பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் குஜராத் டைட்டன்சின் கனவு தகர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்