< Back
கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்க ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னணி வீரர்கள்

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்க ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னணி வீரர்கள்

தினத்தந்தி
|
27 March 2024 2:40 PM IST

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தங்கள் அணியின் வீரர்-வீராங்கனைகளுக்கான 2024-25ம் ஆண்டிற்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தங்கள் அணியின் வீரர் வீராங்கனைகளுக்கான 2024-25 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் பெயர் இடம்பெறவில்லை. முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த அவர் தற்போது டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார்.

மேலும் காயம் காரணமாக கடந்த ஓராண்டாக விளையாடமல் இருந்துவரும் வேகப்பந்து வீச்சாள் ஆண்ட்ரிச் நோர்ட்ஜேவுக்கு இந்த ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள டீன் எல்கரும் இப்பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த ஓராண்டாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சிசாண்டா மகாலா, வெய்ன் பார்னெல், கீகன் பீட்டர்சென் ஆகியோருக்கும் ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை.

ஜெரால்ட் கோட்ஸி, நந்த்ரே பர்கர், டோனி டி ஸோர்ஸி ஆகியோர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளனர். அவர்களுடன் நட்சத்திர வீரர்களான எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டெம்பா பவுமா, டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்ஸி, காகிசோ ரபாடா ஆகியோரும் ஒப்பந்த பட்டியலில் தொடர்கின்றனர்.

தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை பொறுத்தவரையில் கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஷப்னிம் இஸ்மாயில் மட்டும் ஒப்பந்த பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்