டிஎன்பிஎல்: வெற்றிப்பயணத்தை தொடருமா திண்டுக்கல்...லைகா கோவை கிங்ஸ் அணியுடன் இன்று மோதல்...!
|டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆடத்தில் திருப்பூர்-திருச்சி அணிகள் மோத உள்ளன.
சேலம்,
8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நத்தம் (திண்டுக்கல்), சேலம், நெல்லை ஆகிய 4 இடங்களில் நடத்தப்படுகிறது. இதில் கோவை, நத்தம் பகுதி ஆட்டங்கள் முடிந்து விட்டன.
இதையடுத்து சேலத்தில் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 4வது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் புள்ளிபட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
இந்நிலையில் டிஎன்பிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ஷாரூக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 3 போட்டிகளில் ஆடி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
இதையடுத்து இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஐடீரிம் திரூப்பூர் தமிழன்ஸ் அணியும், பால்சி திருச்சி அணியும் மோதுகின்றன.