< Back
கிரிக்கெட்
டி.என்.பி.எல்.: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் எவை - எவை..?

image courtesy: twitter/@TNPremierLeague

கிரிக்கெட்

டி.என்.பி.எல்.: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் எவை - எவை..?

தினத்தந்தி
|
29 July 2024 9:08 AM IST

டி.என்.பி.எல். தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன.

சென்னை,

8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி என் பி எல்) டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்திலும், 2-வது கட்ட ஆட்டங்கள் நெல்லையிலும், 3-வது கட்ட ஆட்டங்கள் கோவையிலும் மற்றும் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் திண்டுக்கல்லிலும் நடைபெற்றன. லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன.

இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த லைகா கோவை கிங்ஸ், ஐ-ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

கடைசி 4 இடங்களை பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், சீகம் மதுரை பாந்தர்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.

லீக் சுற்று நிறைவடைந்த நிலையில், தொடரில் இன்று ஓய்வு நாளாகும். பிளே-ஆப் சுற்று நாளை தொடங்குகிறது.

நாளை நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகளும், நாளை மறுதினம் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளும் மோதுகின்றன. இந்த 2 ஆட்டங்களும் திண்டுக்கல்லில் நடைபெறுகின்றன.

இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டி சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்