< Back
கிரிக்கெட்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பிளே-ஆப் சுற்றை எட்டும் 4-வது அணி எது? இன்று தெரியும்
கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 'பிளே-ஆப்' சுற்றை எட்டும் 4-வது அணி எது? இன்று தெரியும்

தினத்தந்தி
|
4 July 2023 6:10 AM IST

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டும் 4-வது அணி எது? என்பது இன்று தெரிய வரும்.

நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நாளையுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்து விட்டன. பிளே-ஆப் சுற்றில் கால்பதிக்கும் 4-வது அணி எது? என்பது இன்று தெரிந்து விடும். இந்த ஒரு இடத்திற்கு நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (6 புள்ளி), முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் (6 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (4 புள்ளி) இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இன்றைய முக்கியமான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் (இரவு 7.15 மணி) அணிகள் மோதுகின்றன. இதில் மதுரை பாந்தர்ஸ் வெற்றி கண்டால் 8 புள்ளியுடன் சிக்கலின்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். மாறாக மதுரை தோல்வி அடைந்தால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை, திருப்பூர் தமிழன்ஸ் மூன்று அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட் தீர்மானிக்கும். ரன்ரேட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (0.683) வலுவாக இருப்பதால் அந்த அணிக்கு அதிர்ஷ்டம் கிட்டும்.

மேலும் செய்திகள்