< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி.என்.பி.எல்.: சேப்பாக் அணிக்கு எதிராக டாஸ் வென்ற திருச்சி பந்துவீச்சு தேர்வு
|22 July 2024 6:51 PM IST
டி.என்.பி.எல். தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் விளையாடுகின்றன.
நெல்லை,
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் தற்போது நெல்லையில் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் இன்று நடைபெற உள்ள மிக முக்கியமான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.