< Back
கிரிக்கெட்
டி.என்.பி.எல்.: நெல்லைக்கு எதிராக டாஸ் வென்ற திருச்சி பந்துவீச்சு தேர்வு

image courtesy:twitter/@TNPremierLeague

கிரிக்கெட்

டி.என்.பி.எல்.: நெல்லைக்கு எதிராக டாஸ் வென்ற திருச்சி பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
20 July 2024 6:54 PM IST

டி.என்.பி.எல். தொடரின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி - நெல்லை அணிகள் மோதுகின்றன.

நெல்லை,

8 அணிகள் இடையிலான 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி என் பி எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. முதல் 9 லீக் ஆட்டங்கள் சேலத்திலும், அடுத்த 8 லீக் ஆட்டங்கள் கோவையிலும் நடந்தது. முதல் 2 சுற்று ஆட்டம் முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் சூப்பர் கில்லீஸ் 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.

இதனையடுத்து இதன் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இங்கு 6 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி நெல்லை ராயல் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

மேலும் செய்திகள்