டிஎன்பிஎல்: திருப்பூர் அணிக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திருச்சி வாரியர்ஸ்..!
|20 ஓவர்கள் முடிவில் திருச்சி வாரியர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.
நெல்லை,
6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற, திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து திருச்சி வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்த நிலையில் திருச்சி அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அமித் சாத்விக் மற்றும் முரளி விஜய் இருவரும் முறையே 26 ரன்கள் மற்றும் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் குறைந்த ரன்களிலேயே அவுட்டாகினர். இறுதியாக சரவண குமார் 17 ரன்கள் மற்றும் மதி வண்ணன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.
இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் திருச்சி வாரியர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.