< Back
கிரிக்கெட்
டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணிக்கு 146 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திருப்பூர் தமிழன்ஸ்
கிரிக்கெட்

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணிக்கு 146 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திருப்பூர் தமிழன்ஸ்

தினத்தந்தி
|
4 July 2022 9:11 PM IST

திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது.

திண்டுக்கல்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் 9வது லீக் ஆட்டத்தில் ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் ,திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணியில் கேப்டன் அனிருதா ஸ்ரீகாந்த் மற்றும் சித்தார்த் களம் இறங்கினர். அதிர்ச்சி அளிக்கும் வகியில் முதல் ஓவரிலேயே சித்தார்த் டக் அவுட் ஆனார். 4 வது ஓவரில் அனிருதா ஸ்ரீகாந்த்துக்கு ஏற்பட்ட தசை பிடிப்பால் அவர் வெளியேறினார்.

அடுத்து வந்த அரவிந்த 32 ரன்கள் எடுத்தார். சீரான இடைவெளியில் அந்த அணியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. அந்த அணியில் குமார் 7 ரன்னும், விக்கெட் கீப்பர் துஷார் ரஹெஷா 20 ரன்னும் , அடுத்து வந்த ராஜ்குமார் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் எடுத்தது . திண்டுக்கல் அணியில் அதிகபட்சமாக சிலம்பரசன் 3 விக்கெட்டும், ரங்கராஜ், ஹரி நிஷாந்த் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். அடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி விளையாட உள்ளது.

மேலும் செய்திகள்