< Back
கிரிக்கெட்
டிஎன்பிஎல்: மதுரை அணிக்கு 130 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திருப்பூர் தமிழன்ஸ் அணி..!

image courtesy: TNPL twitter

கிரிக்கெட்

டிஎன்பிஎல்: மதுரை அணிக்கு 130 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திருப்பூர் தமிழன்ஸ் அணி..!

தினத்தந்தி
|
20 July 2022 4:02 PM GMT

20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.

சேலம்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன. 2 நாள் ஓய்வை தொடர்ந்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

இந்த நிலையில் இன்று இரவு நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

திருப்பூர் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அரவிந்த் 19 ரன்களும் ஶ்ரீகாந்த் அனிருதா 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய ராஜ்குமார் 10 ரன்களும், பிரான்சிஸ் ரோகின்ஸ் 17 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய மான் பாஃனா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

மேலும் செய்திகள்